2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வரலெட்சுமி விரத பூஜை

Editorial   / 2019 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் 

கேட்கும் வரங்களை அள்ளிக்கொடுக்கும் வரலெட்சுமி விரத பூஜையின் விசேட அம்சமான திருவிளக்கு பூஜை நேற்றிரவு பல்வேறு கோயில்களிலும் சிறப்பாக நடைபெற்ற  இப்பூஜை வழிபாட்டில் பெருமளவிலான பெண் அடியவர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர். குடும்பத்தின் ஐஸ்வரிய வளம், வளமான வாழ்வு மற்றும் கணவரின் சேமத்திற்காகவும் விவாகமான பெண்களால் அனுஸ்டிக்கப்படும்   இவ்விரதமானது திருமணமாகாத பெண்களாலும் தங்கள் இல்வாழ்க்கை இன்புற அமைய வேண்டிப்பிரார்த்தித்து கடைப்பிடிக்கப்படுகின்றது.

   திருவிளக்கு பூஜை வழிபாடுகளின் பின்னர் விரதம் நோற்றவர்கள் அனைவருக்கும் ஆலய பிரதம குருவினால் காப்பும் கட்டப்பட்டது.வழிபாட்டுக் கிரியைகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ப.கேதீஸ்வரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.

 

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .