2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

‘வரி அறவிட உப காரியாலயங்களை ஏற்படுத்தவும்’

Editorial   / 2020 மே 20 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபைக்கு மக்கள் செலுத்த வேண்டிய வரிப் பணத்தை அறவிடுவதற்காக ஒவ்வொரு ஊரிலும் மாநகர சபையின் உப காரியாலயங்களை நிறுவுமாறு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளர் ஏ.சி.எஹியாகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது விடயமாக, கல்முனை மாநகர மேயருக்கு, இன்று (20) அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “கல்முனை மாநகர சபைக்குரிய வரிகளை அறவிடுவதற்காக வீடு வீடாகச் செல்லும் உத்தியோகத்தர்கள், சில அசௌகரியங்களை எதிர்கொள்வதாக அறிய முடிகின்றது.

“இதனைத் தவிர்ப்பதற்காக, மாநகர சபைக்கு உட்பட்ட 06 பிரதேசங்களிலும் ஒவ்வொரு உதவிக் காரியாலயத்தைத் திறந்து, அதற்குப் பொறுப்பாக ஒரு உத்தியோகத்தரையும் நியமித்தால், மக்கள் அங்கு சென்று தமது வரிப் பணத்தை செலுத்துவது இலகுவாக இருக்கும்.

“தற்போது வீடு வீடாக சென்று வரி அறவிடும் உத்தியோகத்தர்களையே உப காரியாலயங்களுக்கும் நியமிக்க முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .