2025 மே 12, திங்கட்கிழமை

வருடாந்த பரிசளிப்பு விழா

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று சேர் ராசிக் பரீட் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா, அதிபர் எஸ்.எல்.றஹீம் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது, வலய, மாகாண மட்ட சிறுவர் மெய்வல்லுனர் போட்டிகளிலும் ஏனைய போட்டிகளிலும் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பிரதம அதிதியாக அம்பாறை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய பிரதம பொறியியலாளர் என்.ரீ.முகம்மட் சிராஜூடீன், கௌரவ அதிதிகளாக ஹாடி உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.பி.ஜெஸ்பர், வலயக் கல்வி அலுவலக தகவல் தொழில்நுட்பப் பாடத்துக்கான இணைப்பாளர் எம்.ஐ.நாசர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X