Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு, 05 ஆயிரம் ரூபாய் விசேட மானியம் வழங்குவதற்குரிய விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ், இன்று ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய கொரோனா வைரஸ் காரணமாக நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு இவ் விசேட கொடுப்பனவு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு கிராமிய சமுதாய அடிப்படை குழுவினூடாக தகவல்கள் திரட்டப்;பட்டு வருவதாகவும், குறிப்பிட்டார்.
இதற்கான விண்ணப்பப் படிவம், கிராம சேவகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரால் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதற்கமைய முன்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பஸ் சாரதிகள், நடத்துநர்கள், ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் பதிலாளர்கள், வருமானத்தை இழந்துள்ள சிறு தேயிலைதோட்ட உரிமையாளர்கள், தொழிலை இழந்துள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள், ஊடகவியலாளர்கள் என பலர் இந்தத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஏனைய சிறு கைதொழில் துறையை சார்ந்தவர்கள், கட்டட நிர்மாணதுறைக்கான சேவை வழங்குநர்கள் ஆகியோருக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினர்.
மாவட்ட சமுர்த்தி காரியலய உள்ளகக் கணக்காய்வு பிரிவு, வங்கியின் முகாமைத்துவப் பிரிவு 24 மணித்தியாலமும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இக் கொடுப்பனவுகள் பெறுவது தொடர்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை 0760707125, 0777004761 மற்றும் 0777531024 ஆகிய தொடர்பிலக்கங்கள் ஊடாக முறையிட முடியும் எனவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago