2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வர்த்தக பீட கல்வி நடவடிக்கை 9, 14இல் ஆரம்பம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 மே 06 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் 2016/2017ஆம் ஆண்டு மாணவர்களுக்கான முதலாம் பருவக் கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் 09, 14ஆம் திகதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளன என, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார், இன்று (06) தெரிவித்தார்.
இதற்கமைய, 3ஆம், 4ஆம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் 09ஆம் திகதியும்; 2ஆம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் 14ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளன என அவர் தெரிவித்தார்.
அத்துடன், விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள 3ஆம், 4ஆம் வருட மாணவர்கள், நாளைமறுநாள்(08) மாலை 05 மணிக்கு முன்னரும், 2ஆம் வருட மாணவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை 05 மணிக்கு முன்னரும், தத்தமது விடுதிகளுக்கு சமுகமளிக்குமாறு, பதிவாளர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X