Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூன் 30 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, வசந்த சந்திரபால
அரசாங்கத்தின் வற்வரி அதிகரிப்பினைக் கண்டித்து இன்;று வியாழக்கிழமை அம்பாறை நகரில் கடையடைப்பும் கண்டனப் பேரணியும் நடத்தப்பட்டது.
அம்பாறை நகர் சந்தை சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில்; சந்தை உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அரசாங்கத்துக்கு எதிராக கோஷமிட்டு பேரணி நடத்தினர்.
நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் காலங்களில் கூறப்பட்ட மக்கள் நலன் சார்ந்த எந்தவிதமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. மாறாக வரிகளை அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரித்து வருவதாக பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
வற்வரி அதிகரிப்பின் மூலம் எல்லாப் பொருட்களுக்குமான விலை பாரியளவில் உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்கள் தமது ஜீவனோபாயத்துக்காக பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நாட்டில் எந்தவிதமான அபிவிருத்திகள் முடக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கம் முறையான கொள்கை எதுவுமின்றி மக்கள் மீதே சுமைகளை திணித்து வருகின்றது. எனவே மிகவும் அதிகமான முறையில் அதிகரிக்கப்பட்ட வற்வரியனை உடன் குறைத்து மக்களின் அண்டாட வாழ்க்கையை சுமூகமாக நடத்துவதற்கு அரசாங்கம் உடன் வழிசமைக்க வேண்டுமெனவும் தெரிவித்தனர்.
அம்பாறை நகர் மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்து ஆரம்பமாகிய பேரணியில் கலந்துகொண்டவர்கள் மாவட்ட செயலகம் வரை சென்று மகஜரை மாவட்டச் செயலாளரிடம் வழங்கி வைத்தனர்.
24 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago