Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் வெற்றிடமாக உள்ள, நான்கு வலயங்களுக்கான வலயக் கல்விப் பணிப்பாளர் பதவியை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்ட்டுள்ளன.
அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயங்களுக்கும், அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை மற்றும் திருக்கோவில் வலயங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்ட்டுள்ளன.
இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் ஒன்றைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி 12 .9. 2022 ஆகும்.
மேலதிக விவரங்கள் மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம், கிழக்கு மாகாண சபையின் www ep. Gov.lk என்ற இணையதளத்தில் பிரவேசித்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ ஜி. திஸாநாயக்க தெரிவித்தார்.
9 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026