2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

வழிகாட்டல் கருத்தரங்கு

Niroshini   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்,நடராஜன் ஹரன்  

ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர், யுவதிகளை தொழில்நுட்பப் பயிற்சி பாடநெறிகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (12)  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர் தரம் கற்ற வேலையற்ற தமிழ் இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை வழங்கும் பொருட்டே இக்கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

2016ஆம் கல்வியாண்டில் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் ஆரம்பிக்கப்படவுள்ள இப்பயிற்சி நெறியில் 19 பாடநெறிகள் உள்ளடங்குகின்றன.

பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த வழிகாட்டல் கருத்தரங்கில் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்கல் உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.பிஸ்றீன் கலந்துகொண்டு எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில் தமது கல்லூரியில் ஆரம்பிக்கப்படவுள்ள பாடநெறிகள் தொடர்பாக விளக்கமளித்ததோடு, விண்ணப்பப்படிவங்களை விநியோகித்து புதிய மாணவர் பதிவுகளையும் மேற்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X