Editorial / 2018 நவம்பர் 13 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
இவ்வாண்டின் வடக்கு, கிழக்கு பருவப்பெயர்ச்சி வானிலைக்கு முகங்கொடுப்பதற்கும் அனர்த்த நிவாரண சேவைக்கு முன்னாயத்தமாவதற்குமான விழிப்புணர்வு செயலமர்வு, கல்முனை பிரதேச செயலகத்தில், நாளை மறுநாள் (15) காலை 9.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் அனுசரணையில், கல்முனை பிரதேச செயலகம் நடத்தும் இச்செயலமர்வு, பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் நடைபெறவுள்ளது.
திணைக்களங்களின் தலைவர்கள், கிராம மட்டங்களில் உள்ள அனர்த்த குழுக்களின் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள், உடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.நபாயிஸ் உட்பட துறைசார்தவர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு விளக்கமளிக்கவுள்ளனர்.
8 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
24 Jan 2026