2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வான்விபத்தில் 13 பேர் காயம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஜூலை 08 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலுவில் துறைமுக பிரதான நுழைவாயில் பிரதான வீதியை இணைக்கின்ற பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடற்படையினரின் வீதி தடையில்   வான்   தடம்புரண்டதால் அதில் பயணம் செய்த  13 பேர் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச் சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (7) இரவு 8.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் உகந்தை முருகன் ஆலயத்தை  தரிசித்து விட்டு தங்கள் சொந்த இடமான கல்முனை பகுதியை நோக்கி செல்லும் போது இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில்  படுகாயமடைந்த 4 வயதான சிறுமி   அம்பாறை  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மேலும்  8 பெண்கள் மற்றும்  4ஆண்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்  சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார் அவ்இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X