Editorial / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, பொத்துவில், குஞ்சான் ஓடைப் பகுதியில், நேற்று (24) இடம்பெற்ற வாகன விபத்தில், தாயும் இரு மகள்களும் உயிரிழந்துள்ளதுடன், மகன், படுகாயங்களுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறாரென, பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள், வீதியில் நின்றுகொண்டிருந்த வேளையில், காரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, இவர்களை மோதியதிலேயே, இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் ஏ.சி.எப்.அஸ்மியா (வயது 34) அவரது 06, 13 வயதுடைய இரு பெண் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனரெனவும், 11 வயதுடைய மகன் படுகாயமடைந்துள்ளாரெனவும் தெரிவித்த பொலிஸார், விபத்துத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026