2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.சி. அன்சார்

நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தை கண்டித்து, மக்கள் விடுதலை முன்னணியின்  ஏற்பாட்டில், சம்மாந்துறை நகரில் இன்று (28) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில், பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான விலையேற்றத்தை கண்டித்து, மக்கள் விடுதலை முன்னணியின் சம்மாந்துறைத் தொகுதியின் பிரதான அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ, மாவட்ட அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது “அரசே எரிபொருள், விவசாய கிருமிநாசினிகளின் விலைகளை குறை, நிவாரணம் கொடு”, “பொருட்களின் விலையை ஏற்றாதே, மக்களின் வயிற்றில் அடிக்காதே”, பொருட்களின் விலை விண்ணை நோக்கி, மக்கள் சட்டியிலிருந்து அடுப்புக்குள், பிள்ளைகள் பட்டினினையை நோக்கி”, “உலக சந்தையில் குறைவு சலுகையை மக்களுக்கு வழங்கு”, வாழ்க்கை செலவைக் குறை, மக்களுக்கு நிவாரணம் வழங்கு”போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியிருந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .