Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜனவரி 22 , பி.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் குறித்தொகுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்
வகையில் கடந்த காலம் தொட்டு விவசாயக் கிணறுகள் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டு வருகின்றன.
இவ் வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயக் கிணறுகளை பெற்றுக் கொண்டவர்கள் அதனை முறையாக பயன்படுத்துவது தொடர்பில், அக்கரைப்பற்று வலய விவசாயிகளுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் அட்டாளைச்சேனை மாகாண விவசாய விரிவாக்கல் நிலையத்தில் நடைபெற்றது.
விவசாய போதனாசிரியர் எம்.அப்துல்லா தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது உதவி விவசாயப் பணிப்பாளர் ஏ. ரவீந்திரன், பாடவிதான உத்தியோக த்தர் எஸ்.எல்.பௌமி உள்ளிட்ட விவசாய போதனா சிரியர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது காரைதீவு, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, கற்சேனை, தீகவாபி ஆகிய பிரதேச ங்களைச் சேர்ந்த நெல் விவசாயச் செய்கையாளர்கள், மேட்டு நிலப் பயிர்ச் செய்கையாளர்கள் போன்றோர் கலந்து கொண்டு அண்மைக்காலமாக விவசாயச்
செய்கையில் தாம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், இதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் வழி வகைகளும் போதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 May 2025
12 May 2025