Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 14 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
கிழக்கு மாகாண பொதுச் சேவையின் விவசாயப் போதனாசிரியர் தரம் IIIக்கு மாகாண ரீதியான பெறப்படும் புள்ளிகளின் முன்னுரிமை வரிசை அடிப்படையில், ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை சலீம், இன்று (14) தெரிவித்தார்.
18 வயதுக்குக் குறையாதவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும், ஆகக் குறைந்தது ஒரு வருடமாவது தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தில் வசித்திருப்பதோடு, அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க கூடியவராக இருத்தல் வேண்டும்.
கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சையில் சிங்கள மொழி/தமிழ் மொழி/ஆங்கில மொழி, கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் வேறு இரு பாடங்களில் திறமைச் சித்தியுடன் (04 திறமைச் சித்திகள்) ஒரே அமர்வில் 06 பாடங்களில் சித்தி பெற்றிருப்பதோடு, கல்விப் பொதுத்தராதர (உ/த) பரீட்சையில் தூயகணிதம், பிரயோக கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல், இணைந்த கணிதம், உயிரியல், விவசாயம் ஆகியவற்றில் 02 பாடங்கள் உள்ளடங்களாக 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்
தொழில்சார் தகைமைகளாக, விவசாயக் கல்லூரியால் வழங்கப்படும் இரண்டு வருட விவசாய டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருத்தல் வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மதச்சார்புடைய பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆள் ஒருவர் இப்பதவிக்கு விண்ணப்பிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குவால் நடத்தப்படும் எழுத்து மூல போட்டிப் பரீட்சையில் பெற்றுக்கொள்ளப்படும் புள்ளிகளின் முன்னுரிமை வரிசை அடிப்படையில் நேர்முகப்பரீட்சையின் மூலம் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும்.
இந்நியமனம் பெறுபவர்கள், கிழக்கு மாகாணத்தின் எப்பாகத்திலும் சேவையாற்றத் தயாராக இருத்தல் வேண்டும் என்பதோடு, கிழக்கு மாகாணத்தில் 10 வருடங்கள் கட்டாயமாக சேவையாற்றுதல் வேண்டும்.
விண்ணப்பங்கள், எதிர்வரும் 31ஆம் திகதி முன்னர் செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம், 198, உட்துறைமுக வீதி, திருகோணமலை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago