2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வீடொன்றினுள் பெண்ணின் சடலம் மீட்பு

வி.சுகிர்தகுமார்   / 2018 ஜூன் 26 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோளாவில் - 2 பிரிவிலுள்ள வீடொன்றினுள் இருந்து, 24 வயதுடைய குடும்பப் பெண்ணொருவரின் சடலம், இன்று (26) மீட்கப்பட்டதென அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

சடலமாக மீட்கப்பட்டவர், 3, 4 வயதுகளையுடைய இரு பிள்ளைகளின் தாயாரான, துரைராசா சர்மிளா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதிகாலை 5 மணியளவில் கணவன் வேலைக்குச் சென்றதன் பின்னரே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதெனவும், அயலவர்கள் கொடுத்த தகவலின் பிரகாரம் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டாரெனவும், அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அம்பாறை விசேட தடயவியல் பொலிஸாருடன் இணைந்து, அக்கரைப்பற்றுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், சடலம், பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X