2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீட்டுத் தோட்டத் திட்டம் அம்பாறையில் ஆரம்பிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு

Editorial   / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

சௌபாக்கிய பத்து இலட்சம் வீட்டுத் தோட்டங்களை அமைக்கும் தேசிய வேலைத்திட்டம், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில், இதுவரை ஆரம்பிக்கப்படவில்லையென, வீட்டுத்தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய, மேற்படி வேலைத்திட்டம், விவசாய திணைக்களத்தின் வழிகாட்டலில், நாடளாவிய ரீதியில் செயற்;படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றது.

'சௌபாக்கியமான வீட்டுத் தோட்டம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், ஏனைய மாகாணங்களில் மரக்கறி விதைகள், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, கமநல சேவை நிலையங்களால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இருந்தபோதிலும், அம்பாறை கரையோரப் பிரதேசங்களில், இத்திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று, வீட்டுத் தோட்ட உரிமையாளர்களும் விவசாயிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக விவசாயத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீரிடம் வினவிய போது, சௌபாக்கியமான வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை திட்டத்துக்கு, விவசாயத் திணைக்களத்தால் விதைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன என்றார். 

ஏனைய விடயங்களான வீட்டுத் தோட்ட பயனாளிகள் மற்றும் விவசாயிகளை தெரிவு செய்து விநியோகிப்பதற்கு கமநல சேவை நிலையங்களின் செயற்பாடாகும் என்றார்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட கமநல சேவை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மானிய விலையில் பயிர்க் கன்றுகள், பயிர் விதைகளை வழங்குமாறும், சௌபாக்கிய வீட்டுத் தோட்டத்தை மேற்கொள்வதற்கு வழிவகைகளை ஏற்படுத்தித் தருமாறும், வீட்டுத் தோட்ட உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X