2025 மே 15, வியாழக்கிழமை

வீதி புனரமைப்பு பணிகள் மும்முரம்

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில், பொத்துவில் நகரின் பிரதான வீதியையும் சாகாமம் கிராமத்தின் ஊடாகச் செல்லும் அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியையும் இணைக்கும் திருக்கோவில், வாக்ரீசா வீதியை புனரமைக்கும் பணிகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த வீதியின் இரு பக்கங்களிலும் உள்ள விவசாய காணி உரிமையாளர்களின் சம்மதங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில், வீதி புனரமைப்புப் பணியை முன்னெடுக்கும் அதிகாரிகள், இன்று (09) விவசாயிகளைச் சந்தித்திருந்தனர்.

5.38 கி.மீற்றர் நீளமுடைய வாக்ரீசா வீதி புனரமைப்பு பணிகளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 240.53 மில்லியன் கடன் உதவியுடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்துள்ளது.

புனரமைப்பு பணிகளை, 2021 செம்டெம்பர் மாதம் 24திகதி நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .