2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வீதியில் வேகமாகச் செல்லும் கனரக வாகனங்களால் பொதுமக்கள் பாதிப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜூலை 30 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஒலுவில், அஷ்ரப் நகர் வீதியில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள கனரக வாகனத்தின் வேகத்தைக் குறைக்குமாறு, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஷ்ரப் நகர், பள்ளக்காடு ஆகிய பிரதேசங்களில், நாளாந்தம் நூற்றுக்கும் அதிகமான கனரக வாகனங்கள் கிரவல் ஏற்றிக் கொண்டு, பயணிகளையும் பாதசாரிகளையும் கவனத்தில்கொள்ளாது மிகவேகமாகப் போட்டித் தன்மையுடன் செல்வதால், போக்குவரத்தில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வீதியின் இரு மருங்கிலும் வாய்க்கால், பற்றைக் காடுகளுடன் குன்றும் குழியுமாக மிகவும் ஒடுக்கமான வீதியாகக் காணப்படுவதால், வீதியில் பயணிக்கும் பொதுமக்கள், கனரக வாகனங்களின் வேகத்தால் விபத்துகளுக்குள்ளாகியுள்ளனர் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இவ்வீதியில் போக்குவரத்துப் பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்துவதுடன், வேகக் கட்டுப்பாட்டைக் குறைக்குமாறும், கனரக வாகனங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X