Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜனவரி 01 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன்
அம்பாறைமாவட்டத்தின் பல இடங்களில் செய்கை பண்ணப்பட்டுள்ள நெற்செய்கைகள் வெண் கதிர்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அக்கரைப்பற்று மேற்கு கமநலச் சேவைப் பிரிவில், வெண் கதிரின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நெற்செய்கைகளிலிருந்து முற்றுமுழுதாக நெல்லை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் நட்டமடைந்த விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குமாறு, விவசாய அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடும் மழை ஏற்பட்டதன் காரணத்தால் இவ்வாறான வெண் கதிர்களின் தாக்கம் அதிரித்துள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நெற் செய்கைக்காக, வங்கிகளில் விவசாயக் கடன் பெற்று, விவசாயத்தை மேற்கொண்டுவந்த விவசாயிகள், இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, வெண் கதிர்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெற் செய்கைகளுக்குரிய நட்டஈட்டை வழங்குதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
7 hours ago
8 hours ago