2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு

Editorial   / 2022 மார்ச் 08 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை காரணமாக கரையோரப் பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழ விற்பனை  அதிகரித்துள்ளது.

குறிப்பாக சம்மாந்துறை - அம்பாறை பிரதான வீதி,  கல்முனை- அக்கரைப்பற்று , பிரதான வீதியோரங்களில் சைக்கிள்கள்,   மோட்டார் சைக்கிள்கள், ஓட்டோக்களில் வெள்ளரிப் பழத்தை கொண்டு வந்து  வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

பொதுமக்கள்   ஆர்வத்துடன் இவ்வெள்ளரிப் பழத்தை கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

தற்போது அதிக வெப்பம் காரணமாக  அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், 150 ரூபாய் முதல் சுமார் 350 ரூபாய் வரை இவ் வெள்ளரிப்பழம்  சிறியது முதல் பெரியது வரையான பருமனுக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேற்குறித்த இப்பழ வகையானது  பெரும்பாலும் வெப்பமான  காலங்களிலேயே அதிகமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றமை  இங்கு குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருமளவில் வெள்ளரிப்பயிர்ச் செய்கை பண்ணப்பட்டு வருவதுடன் இவைகள் ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X