2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வைத்திய அதிகாரியாக அர்ஷாத் கடமையேற்பு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2020 மார்ச் 03 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டொக்டர் அர்ஷாத் காரியப்பர், நேற்று (02) மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை மாநகர மேயர் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநகர சபையின் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், மாநகர சபையின் சட்டப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எம்.இஸ்மாயில், மேயரின் இணைப்பாளர் ஏ.சி.சமால்தீன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, புதிய பிரதம சுகாதார வைத்திய அதிகாரியான டொக்டர் அர்ஷாத் காரியப்பருக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்ட மாநகர மேயர், கல்முனை மாநகர பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கும் உணவு வகைகளின் தரத்தையும் சூழல் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என நம்புவதாகத் தெரிவித்தார்.

புதிய பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர் அவர்களின் வழிகாட்டலில் மாநகர சபை சுகாதாரப் பிரிவு வினைத்திறனுடன் சேவைகளை முன்னெடுப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் மாநகர மேயர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .