2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை ஆரம்பம்

எஸ்.கார்த்திகேசு   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவில் நிர்வாகத்தால் அறநெறிப் பாடசாலை ஞாயிற்றுக்கிழமை (16) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக, கோவில் தலைவர் எஸ்.சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அறநெறிப் பாடசாலை, இந்துக் கலாசாரத் திணைக்களத்தின் ஊடாக, கோவில் நிர்வாக சமூக மேம்பாட்டு வேலைத் திட்டத்தின் கீழ், கோவில் முன்றலில் அமைந்துள்ள திருமூலர் திறந்துவைக்கப்படவுள்ளது.

சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து முன்னைய அறநெறிப் பாடசாலையைத் தொடர்ந்து அங்கு நடத்த முடியாத சூழ்நிலை காணப்பட்டதுடன், சுமார் 16 வருடங்களின் பின்னர் மீண்டும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் ஆன்மீக அதிதியாக, இந்தியா ரீசிசேகம் சுவாமி நித்தியானத்தா சரஸ்வதி மகாராஜு கலந்துகொள்ள இருப்பதுடன், ல் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், மாவட்டக் கலாசார உத்தியோகத்தர் ரி.ஜெயராஜ், பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி சர்மிளா பிரசாந், கோவில் நிர்வாகிகள், சமய, பொது நிறுவனங்களின் நிர்வாகிகள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X