2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ முருகன் கோவில் முன்றலில் நாளை தைப்பொங்கல் திருவிழா

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

கிழக்கு மாகாணப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நாவிதன்வெளிப் பிரதேச

செயலக த்துடன் இணைந்து நடாத்தும் தைப்பொங்கல் திருவிழா நாளை (23) நாவிதன்வெளி மத்திய முகாம் ஸ்ரீ முருகன் கோவில் முன்றலில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் பிரதம

அதிதியாகவும் கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க  ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் பாரம்பரிய தமிழர் பண்பாட்டு கலாசார முறையில் வயல் நிலத்தில் நெல்

அறுவடை செய்யப் பட்டு மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பெண்களின் பங்குபற்றுதலுடன் கோலமிட்டு நெல்குற்றி புத்தரிசை பானையிலிட்டு பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளன.

காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த பொங்கல் திருவிழாவில் நாவிதன்வெளி

பிரதேச கோவில்கள், பிரதேச செயலகம், திணைக்களம் என்பன பொங்கல் பானைவைத்து ஒரே நேரத்தில் பொங்கல் நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கிழக்கு மாகாண கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர்

ஐ.கே.ஜி.முத்துபண்டா, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் எஸ்.நவநீதன், நாவிதன்வெளிப் பிரதேச செயலாளர்

எஸ்.ரங்கநாதன் ஆகியோரது அழைப்பின் பெயரில் மாகாண மற்றும் மாவட்ட அரச உயர் அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், சர்வமதத் தலைவர்கள்,

கிராமமட்ட சிவில் அமைப்பு க்களின் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்படவுள்ளதுடன் பங்குபற்றும் கலைஞர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X