2025 மே 17, சனிக்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்தவரை விசாரணை செய்யுமாறு உத்தரவு

Niroshini   / 2016 நவம்பர் 22 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை - பொத்துவில் பிரதேசத்தில் 70 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ. வாஹாப்தீன், இன்று செவ்வாய்க்கிழமை (22) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொத்துவில் பொலிஸாரால் குறித்த நபர் நேற்றுத் திங்கட்கிழமை (21) கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வேண்டுகோளுக்கிணங்க, பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ. வாஹாப்தீன், இன்று (22) பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .