2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

ஹெரோய்ன் விற்பனை செய்தவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

31 மில்லிகிராம் ஹெரோய்ன் விற்பனை செய்ததோடு, 98 மில்லிகிராம் ஹெரோய்னை தன்வசம் விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு அம்பாறை மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

அம்பாறை, கெமுனுபுர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய அப்புஹாமிலாகே சிஹான் பெரேரா என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்நபர், ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபடுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அவரைப் பின்தொடர்ந்த பொலிஸார், அம்பாறை இங்கினியாகலை வீதியில் வைத்து ஹெரோய்ன் விற்பனையில் அவர்  ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கைது செய்தனர். 

சந்தேகநபரை, நேற்று திங்கட்கிழமை (12) ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X