2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

அதிகரித்துச் செல்லும் குடும்ப வன்முறைகள்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 09 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சட்ட வரலாற்றில் ஒரு மைல்கல்லாக குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை கருதலாம். பெண்கள் இயக்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் நீண்டகால கோரிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் 2005-08-09 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

எனினும் குடும்ப வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.  கணவனை கோடரியால்கொத்திய மனைவி, தனது பிள்ளையுடன் பொலிஸில் சரணடைந்துள்ள சம்பவம், கெப்பத்திகொல்லாவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, தன்னுடைய குழந்தையுடன் கொள்ளுப்பிட்டி கடலில் தாயொருவர் குதித்துள்ளார். அவர்காப்பாற்றப்பட்ட போதிலும், குழந்தை கடலில் மாயமாகியுள்ளது. இதுவும் குடும்ப வன்முறைகாரணமாக இடம் பெற்றுள்ளது என்பது விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.  

குடும்பவன்முறை என்பது பாதிக்கப்பட்டவருக்கும் குற்றவாளிக்கும் இடையிலானதனிப்பட்ட உறவின் விளைவாக ஒருநபரை உடல் ரீதியாகவோ அல்லதுஉளவியல் ரீதியாகவோ துஷ்பிரயோகம் செய்வதாகும். 

துஷ்பிரயோகம் வீட்டுச் சூழலுக்குள் நடக்க வேண்டிய அவசியமில்லை,வீட்டிற்கு வெளியேயும் நிகழலாம். உடல் ரீதியான துஷ்பிரயோகம் என்பதுதன்னிச்சையான கருக்கலைப்பு, கொலை முயற்சி, குழந்தைதுஷ்பிரயோகம், காயப்படுத்துதல், கடுமையான காயம்,   அடைத்துவைத்தல், வற்புறுத்தல், குற்றவியல் வற்புறுத்தல், தாக்குதல், பாலியல் வன்கொடுமை, குழந்தைகளைபாலியல் ரீதியாக சுரண்டுதல், இயற்கைக்குமாறான குற்றங்கள், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம், குற்றவியல்மிரட்டல் போன்ற செயல்களை உள்ளடக்கியது,இவை பாதிக்கப்பட்டவரின் உடலை நோக்கி இயக்கப்படுகின்றன. 

குடும்பவன்முறையில் உடல் ரீதியான துஷ்பிரயோகம்மட்டுமல்ல, மன ரீதியான துஷ்பிரயோகமும்அடங்கும். சட்டத்தில் கூறப்பட்டுள்ள படி, எந்த ஒரு உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமும் இந்தமன ரீதியான துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையது.

ஒருவர் துஷ்பிரயோகம் செய்யக்கூடிய பல வழிகள் உள்ளன.கடுமையான அவமதிப்புகள், வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் கடுமையான உடனடிமன உளைச்சலை ஏற்படுத்தும் எந்த ஒரு செயலும் மன ரீதியானதுஷ்பிரயோகம் ஆகக் கருதப்படலாம். 

வீட்டுவன்முறையால் பாதிக்கப்பட்டவர் குடும்ப வன்முறைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் பாலின பாகுபாடுஇல்லாமல் நிவாரணம் பெறலாம். இந்தச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள படிஉறவில் இருக்கும் நபர்கள், ஒரு தரப்பினர் அந்தஉறவைப் பயன்படுத்தி மற்ற தரப்பினருக்கு எதிராககுடும்ப வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்குத்தொடரலாம். 

குடும்பவன்முறை காரணமாக, கணவன் அல்லது மனைவியால் எடுக்கப்படும் மிக மோசமான தீர்மானங்களால்அவர்களுடைய பிள்ளைகள் அநாதையாக்கப்படுகின்றனர்   முன்னர், கணவன் மீது மனைவிக்கும், மனைவி மீது கணவனுக்கும் ஏற்பட்ட சந்தேகமே குடும்ப வன்முறைக்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது.

எனினும், தற்போது அலைபேசியில் ஓர் அழைப்பு வந்துவிட்டால், அதற்கும், ஏன், சமூக வலைத்தளங்களில் ஒரு விருப்பத்தை தெரிவித்து லைக் செய்தாலேயே சந்தேகம் தலைவிரித்தாடுகிறது. இதற்கும் இரு தரப்பினரையும் தெளிவுப்படுத்துவது அவசியமாகும். இல்லையேல் குடும்ப வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது சிரமமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X