2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

பிஞ்சுகளின் உயிர்களை பறிக்கும் நடுவீதிகள்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டைவிட்டு வெளியேறுவோர் திரும்பி வருவார்களா? என்ற பேரச்சம் ஒவ்வொரு மனிதரிடத்திலும் சூழ்கொண்டுள்ளது அந்தளவுக்கு வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன.

குளியாப்பிட்டி, நிலபொல பல்லேவெல பாலத்திற்கு அருகில் புதன்கிழமை (27) காலை இடம்பெற்ற  விபத்தில் பாடசாலை மாணவிகள் இருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

என்னதான், தேசிய விபத்து தடுப்பு வாரத்தை பிரகடனப்படுத்தி, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி இருந்தாலும்,  விபத்துகளால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7ஆம் திகதி முதல் ஜூலை 11 ஆம் திகதி வரையிலும் அமல்படுத்தப்பட்டிருந்தது. 

இலங்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்  நோயாளர்களில் பெரும்பாலானவர்களில் விபத்துகளால் படுகாயமடைந்து அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன், வீதி விபத்துக்களால் கூடுதலான இறப்புகளும் அங்கவீனமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

ஒவ்வொரு ஆண்டும், இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் ஏழு பேரில் ஒருவர் மருத்துவ கவனிப்பு தேவைப்படும் விபத்தின் அபாயத்தில் உள்ளனர், மேலும் ஒவ்வொரு நிமிடமும், குறைந்தது 6-8 இலங்கையர்கள் மருத்துவ கவனிப்பு தேவைப்படும் விபத்தின் அபாயத்தில் உள்ளனர் என்று அமைச்சும் கூறுகிறது.

விபத்துக்களைத் தடுப்பதில் அதிக கவனம் செலுத்துதல்,விபத்துக்களால் ஏற்படும் இறப்புகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இவை இரண்டும் அடிப்படையாகும். 

விபத்துகளால் இறக்கும் மக்கள் குறித்து சமூகத்தில் உணர்திறன் குறைவு உள்ளது. இது சாத்தியமானாலும் கூட இது அவ்வாறு இல்லை என்பது வருந்தத்தக்கது. சுகாதார அமைச்சின் விபத்து தடுப்பு பணியகம் விபத்துகளைத் தடுப்பதற்கான முறையான திட்டத்தின் அவசியத்தைக் கடந்த காலங்களில் உணர்த்தியுள்ளது, 

விபத்துக்களைத் தடுப்பதில் முறையான பயிற்சி இல்லாவிட்டாலும், விபத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் ஊடகங்கள் மூலம் தொலைதூரப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஏனெனில், பல விபத்துகளில், முதலில் சரியான சிகிச்சை பெற்றால் மரணம் கூட தடுக்கப்படலாம்.இந்நிலையில், விபத்துகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியரான பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்துள்ளார். 

“நம் நாட்டில் உள்ள தரவுகளைப் பார்க்கும்போது, விபத்துகளால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.   இவற்றில் பெரும்பாலான விபத்துக்கள் அறியாமை மற்றும் சோதனை செய்து பார்ப்பதன் ஊடாக இடம்பெறுகின்றது. 

விபத்துகள் பல வடிவங்களில் வருகின்றன. 2 முதல் 3 வயது வரையிலான அறியாமையால் ஏற்படும் விபத்துகளாகும். அடுத்ததாக, 12-14 வயதுடையவர்கள் இளமைப் பருவத்தில் நுழையும் போது மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகளாகும்.

விபத்துகளைத் தடுப்பதற்காக சிறுவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியதன் அவசியமாகும், சிறுவர்களுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தினால், திடீர் விபத்துகளைத் தவிர்க்கலாம். அவற்றிலிருந்து ஏற்படும் உயிரிழப்புகளையும், அங்கவீனமடைந்தலையும் தவிர்க்கலாம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .