R.Tharaniya / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் அச்சுறுத்தல் இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரின் வாழ்க்கையையும் அச்சுறுத்தும் ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இது ஒரு சமூக-பொருளாதார பேரழிவாக மாறியிருப்பதை அவதானிக்கலாம்.
இளைஞர்கள், முதியவர்கள் ஏன், பெண்கள், யுவதிகள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் போதைப்பொருட்களுக்கு ஆளாக்கப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களில் பலரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
ஐஸ்லாந்து போல தோற்றமளிக்கும் அளவுக்கு ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மித்தெனிய, ஐஸ்லாந்தின் தலைநகரம் என்றும் பொதுவெளியில் பேசப்படுகின்றது.
இந்தப் பின்னணியில்தான் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிப்பதற்கான ‘தேசிய ஒன்றிணைவு’ பிரச்சாரம் தொடங்கும். இந்த செயல்முறையில் போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வு செய்தல், பொதுமக்களை போதைப்பொருள் ஒழிப்பில் ஈடுபடுத்துதல், பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வெகுஜன அமைப்புகளை ஈடுபடுத்துதல் மற்றும் ஊடக பிரச்சாரத்தை நடத்துதல் ஆகியவை அடங்கும்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது என்பது அரசாங்கத்தாலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ மட்டும் செய்யக்கூடிய பணி அல்ல. நீண்ட காலமாக இது குறித்து கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில், பாதுகாப்புப் படையினரின் சில உறுப்பினர்களும் அரசியல் ஆர்வலர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்பட்டது.
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு நீண்ட வரலாறு உண்டு. இது காலனித்துவ ஆட்சிக்கு முந்தையது. ஆனால் திறந்த பொருளாதாரத்திற்குப் பிறகு தோன்றிய சமூக சூழ்நிலை காரணமாக போதைப்பொருள் பயன்பாட்டின் சமூகப் பிரச்சினை தீவிரமாகிவிட்டது. சமூகத்திலிருந்து பிறந்து முழு சமூகத்திலும் பாதகமான விளைவை ஏற்படுத்தும் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தல், அரசியல் அதிகாரிகளின் உதவி மற்றும் ஆதரவின் காரணமாக ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியது.
மிகவும் துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், இளம் தலைமுறையினர் இந்த அச்சுறுத்தலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இந்த நாட்டைக் கைப்பற்றப் போகும் இளைஞர்கள் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடுவது மிகவும் சாதகமான சூழ்நிலை அல்ல.
இந்த அச்சுறுத்தலைத் தடுப்பதில் சமூகத்தின் பங்களிப்பும் மகத்தானது. கூடுதலாக, போதைப்பொருட்களுக்கு தேவையற்ற விளம்பரம் அளிக்காத ஊடகமும் அவசியம்.
புகையிலை மற்றும் மது அருந்துதல் மீதான வரிவிதிப்பு அதைக் குறைப்பதற்கான ஒரு முறையாகவும் அடையாளம் காணப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் போதைப்பொருள் பரவல் நாடு முழுவதும் ஒரு பேரழிவாக பரவியுள்ளது.
கல்வி முறையின் சரிவு, குடும்ப நிறுவனத்தின் சரிவு மற்றும் சமூக-கலாச்சார மைய அமைப்பின் சரிவு ஆகியவை முக்கிய பிரச்சினைகளில் அடங்கும். இது பகுத்தறிவு நுண்ணறிவு இல்லாத ஒரு சமூகத்தின் தோற்றத்திற்கு தீவிரமாக பங்களித்துள்ளது எனலாம். எனவே, போதைப்பொருளை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமாகும். இல்லையேல் நாடு நரகமாகும் என்பது நிச்சயம்.
52 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago