Janu / 2025 டிசெம்பர் 28 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வொரிடத்திலும் தொற்றிக்கொள்ளும் ஏதோவொரு தீய பழக்கம், வழக்கமாகிவிடும். அதிலிருந்து பலரும் விடுபட்டுக்கொள்வர். இன்னும் சிலர் மீண்டெழ முடியாமல் மூழ்கிவிடுவர். அவ்வாறானவர்களில் பெரும்பாலானவர்கள், இன்றிலிருந்து விட்டுவிடுவேன் என சபதம் எடுத்துக்கொள்வர். இன்றைய நாளிலிலும்கூட சபதமெடுப்பர்.
பிறந்த நாள், வருடப்பிறப்பு, இயேசு கிறிஸ்து பிறந்திருக்கும் நன்நாளில் கூட சபதமெடுப்பதை பலரும் விரும்புவர். ஒவ்வொரு குடும்பங்களிலும் பிறக்கும் குழந்தைகள் அந்தந்த குடும்பங்களுக்கு கிடைக்கும் ஓர் அதிசயம். ஆனால், பாலகன் இயேசுவின் பிறப்பு மனித இனத்துக்கே கிடைத்த மாபெரும் அதிசயமாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.
இரண்டொரு வருடங்களாக இன்றைய நன்நாளை, குடும்பத்தாருடன் வெளியில் சென்று மிகவும் சந்தோஷமாக கொண்டாடி மகிழமுடியாத சூழல் நிலவியிருந்தது. அதன் தாக்கம் இன்னும் நம்மையெல்லாம் சுற்றிக்கொண்டிருந்தாலும், மிகக் கவனமாக, வெளியில் சென்று திரும்புவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிலவற்றை எளிதில் மறந்துவிடலாம். மனிதர்களிலும் பலர் மறக்கப்பட்டுவிடுவார்கள், சம்பவங்களும் மறக்கப்பட்டுவிடும். ஆனால், டித்வா புயலினால் ஏற்பட்ட பேரழிவுகளில் இருந்து பலரும் மீண்டெழ முடியாதநிலையில் இருக்கும் நிலையில்தான், கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பரிசுப்பொருட்களை கொடுத்து, விருந்துபசாரம் உண்டுமகிழ்ந்த காலம் மலையேறியிருந்தது. அவையெல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், எங்குச் சென்றாலும் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதன் ஊடாக, அடுத்தடுத்த பிறழ்வுகளிலில் இருந்து தம்மையும் மற்றவர்களையும் காப்பாற்றிக்கொள்ள முடியும்.
வரலாற்றில் வலம் வந்த எத்தனையோ பேர் இம்மண்ணிலிருந்து மறைந்து விட்டார்கள் ஏன்? மனித மனங்களிலிருந்தும் மறைந்து விட்டார்கள். ஆனால் உலகிற்கு ஒளியாக, வாழ்வுக்கு வழியாக, உண்மைக்கு சான்றாக, கன்னிமரியின் மகனாக இம்மண்ணில் பிறந்த இயேசு இன்றும் இம்மண்ணில், மனித மனங்களில் வாழ்ந்து வருகிறார்.
இந்த நன்நாளிலில் தான் அமைதியும் சமாதானம் விதைக்கப்பட்டது. ஆனால், உலகில் பல இடங்களில் இவ்விரண்டையும் தேடிக்கொண்டிருக்கின்றனர். எவ்வளவு விலைக்கொடுத்தாலும் இவ்விரண்டையும் வாங்க முடியாது. ஆனால், மனித உள்ளங்களில் தோன்றி, ஆழமாய் அடிக்கப்பட்டிருக்கும் தீய எண்ணங்கள் எனும் ஆணியை பிடுங்கியெடுத்து எறிவதன் ஊடாக, அமைதி, சமாதானத்தை இலகுவில் வென்றெடுத்துவிடலாம்.
எல்லாமே, மனிதர்களின் மனங்களில்தான் இருக்கிறது.
மனித உள்ளங்களில் தோன்றிய தீய எண்ணங்கள் ஒழிக்கப் பட்டு அமைதியும், சமாதானமும் விதைக்கப்பட்ட இந்நாளில் நாமெல்லாம் உறுதிப்பூண்டுக் கொள்வோமாயின் உலக சமாதானம் வெகு தொலைவில் இல்லை. அவையெல்லாம் எமது எண்ணங்களிலேயே இருக்கிறது என்பதை நினைவூட்டுகின்றோம்.
உலக நாடுகள் பலவற்றுக்கு இடையில், ஏற்பட்டிருக்கும் மோதல்கள், யுத்தம் இவையெல்லாம் அடியோடு ஒழிக்கப்பட்டு, உலகின் சமாதானம் மலரவேண்டுமென பாலகன் அவதரித்த இந்நாளிலாவது உறுதிப்பூண்டு பிரார்த்தனை செய்வோமாக.
25.12.2025
25 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
49 minute ago
1 hours ago