Janu / 2025 மார்ச் 17 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் நானுஓயா டெஸ்போட்டில் நிகழும் மங்களகரமான குரோதி வருடம் பங்குனி முதலாம் நாள், தமிழர் வரலாற்றை கூறும் பொன்னர் சங்கர் நாடக நிகழ்ச்சி சனிக்கிழமை(15) இரவு 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (16) காலை 7:00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
குறித்த பொன்னர் சங்கர் வரலாற்று நாடக நிகழ்ச்சி நானுஓயா டெஸ்போட் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திடலில் க.குணசேகரம் மாஸ்டரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
இந்த நாடகம் அண்ணன்மார் சுவாமி என்று அழைக்கப்படும் பெரிய அண்ணன் மற்றும் சங்கர் என்று அழைக்கப்படும் சின்ன அண்ணன் ஆகிய இரு சகோதரர்களின் கதையே பொன்னர் சங்கர் வரலாற்று கதையாகும் ஒவ்வொரு வருடமும் நானுஓயா டெஸ்போட்டில் குறித்த பொன்னர் சங்கர் வரலாற்று கதையை நாடகமாக நடத்தப்பட்டு வருகின்றன. இம்முறை 103 வது முறையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் பெரியகாண்டியம்மனாக க.ராஜேந்திரன், பொன்னராக எஸ்.ஆனந்தராஜ், சங்கராக வி.செல்வசந்திரன், தனுஸ்கரன், மகாமுனியாக எம்.மோகன்ராஜ், தங்காவாக பாலகிருஷ்ணன், வீரபோகுவாக எஸ்.நகுலேந்திரன், அத்தாம்பிள்ளையாக பி.குமாரவேல், காளிதேவியாக ஆர்.சாந்தகுமார், தட்டான் ஆசாரியாக தங்கவேல் (பாரிஸ்), மாயவராக ஈஸ்வரன் விஜியா, (தொண்டான்). அன்னத்தேவியாக தனுஸ்கரன். தாதிமார்களாக ஆ.கிபிசான் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.
நாடகத்தை கண்டுகளிக்க ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.
செ.திவாகரன், டி.சந்ரு





7 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Nov 2025