2025 மே 01, வியாழக்கிழமை

122 வது வருடாந்த பங்குனி உத்திரம் சிறப்பு விழா

Janu   / 2024 மார்ச் 25 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சிவ ஆலயங்களில் ஒன்றான கெட்டபுலா குயின்ஸ்பேரி தோட்டத்தில் அமைந்துள்ள நவநாதர் சித்தர் சிவ ஆலயத்தில் 122வது வருடாந்த பங்குனி உத்திரம் சிறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்றது.

நவநாதர் சித்தர்  24.03.1902 ஆம் ஆண்டு சமாதியடைந்துள்ளதுடன்  அதே தினத்தில் இம்முறை 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திரம் விழாவும்  சித்தர் சமாதியில் எழுந்தருளிய சிவலிங்கத்திற்கு விசேட பூஜைகளும் இடம்பெற்றுள்ளது .

அத்துடன் இந்த சிவாலத்தின் பகுதியாக அமைந்துள்ள ஒரே கல்லில் உருவம் கொண்டுள்ள வள்ளி, தெய்வானை சமேதர முருகனுக்கு பால்குட பவணி மற்றும் பறவைகாவடி ஊர்வலமும் இடம்பெற்றுள்ளது .

ஆ.ரமேஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .