2026 ஜனவரி 10, சனிக்கிழமை

99வது ஜயந்தி விழா...

Janu   / 2026 ஜனவரி 08 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்பிலுவில் வினாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில், மகான் குருதேவா சிவாய சுப்பிரமணிய சுவாமியின் 99வது ஜயந்தி விழா ஆன்மீகப் பண்புகளுடன் புதன்கிழமை  (7) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முதலில் விநாயகர் வழிபாடு பின்னர் குரு பாத பூஜை மேற்கொள்ளப்பட்டு, புனித காணிக்கைகள் செலுத்தப்பட்டன.

உளமார்ந்த பிரார்த்தனைகளும், ஆரத்தியும் நடைபெற்று குரு மகிமை குறித்து விளக்கமான ஆன்மீக சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.

அதனையடுத்து பக்தி பஜனைகளும், இறைநாம பாடல்களும் பக்தர்களின் உள்ளங்களை நெகிழ வைத்தன.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .