2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

அளுத்மாவத்தை ஐயப்பன் கோவில் வருடாந்த தேர் திருவிழா

Janu   / 2023 ஜூலை 12 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இந்தியாவின் கேரளா மாநிலத்தில் சபரிமலை தர்மசாஸ்தாவின் ஸ்ரீ ஐயப்ப அவதாரமாக அருள் பாலிக்கும் ஆலயமாக இலங்கைத் திருநாட்டில் கொழும்பு  15   அளுத்மாவதையில் அருள் சுரக்கும் ஆனந்த ஐயப்பா சுவாமியின் வருடாந்த தேர் திருவிழா நடைபெறவுள்ளது.

நிகழும் சோபகிருது வருடம் ஆடி மாதம் 9ம் நாள் செவ்வாய்கிழமை (25.07.2023) அன்று  சப்தமி திதியும் சித்திரை நட்சத்திரம் கூடிய  சுபதினத்தில் காலை 5.45 மணிக்கு மஹாகணபதிஹோமாம், அஷ்டாபிஷேகம் நடைபெற்று மாலை 5.30 மணிக்கு ஆச்சார்யவரணம் கொண்டு கொடியேற்றத்தோடு திருவிழா ஆரம்பமாகவுள்ளது

தொடர்ந்து  ஐந்து  நாட்களும்  ஆனந்த ஐயப்பனுக்கு கேரளா தர்மசாஸ்தா சந்நிதானத்தில் நடைபெறும். ஆகம விதிமுறைக்கேற்ப  விஷேட  பூஜைகளோடு, சத்தியமான  பொண்ணு பதினெட்டாம் படி பூஜைகளும் இடம் பெற்று 6ம் நாளான ஞாயிற்றுக்கிழமை 30.07.2023 அன்று காலை கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், திருப்பள்ளி எழுச்சி, ஆராட்டைத் தொடர்ந்து காலை 9.00 மணிக்கு ஆனந்த ஐயப்ப சுவாமி தேரேறிஅளுத் மாவத்தை வீதியோடு முகத்துவாரம் காவல் நிலைய வழியாக ஸ்ரீ மகா விஷ்ணு கோவிலை சென்றடையும்.

மட்டக்குளிய விஸ்வைக் சுற்று வட்டத்தினூடாக மீண்டும் தேர் அளுத்மாவத்தை வழியாக ஆலயத்தை வந்தடைவதோடு அன்று பகல் விஷேட பூஜா வழிபாடுகளோடு கொடியிறக்கம், கலசாபிஷேகத்தை தொடர்ந்து திருவிழா இனிதே நிறைவு பெறும்.

அனைத்து பக்த உள்ளங்களையும் ஆலய விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு  ஐயனின் பூரண ஆசியை  பெற்றுக் கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபை கேட்டு கொள்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X