2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஆடிவேல் விழா தீர்த்தம்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ சமுத்திர தீர்த்தோற்சவம் சனிக்கிழமை (9) அன்று சிறப்பாக நடைபெற்றது.

ஆலய வண்ணக்கர் சுதுநிலமே சுதா முன்னிலையில் கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகிய மகோற்சவம் 
 உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயபிரதம குரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற்று வந்நது.

 கொடியேற்றம் தொடங்கி தொடர்ச்சியாக 15 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று சனிக்கிழமை 09ஆம் திகதி  சமுத்திரத்தில் தீர்த்த உற்சவம் இடம் பெற்றது.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X