2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஆயித்தியமலை சதாசகாயமாதா ஆலய திருவிழா ஆரம்பம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாய மாதா திருத்தலத்தின் திருவிழா ஒகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு  செப்டம்பர்03ஆம்திகதிவரைஇடம்பெறவுள்ளது.

ஆயித்தியமலை சதாசகாய மாதா திருத்தலத்தின் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை(25) ஆரம்பமாகியது.

திருவிழாவிற்கான பாதயாத்திரை எதிர்வரும் செப்டெம்பர்  09 திகதி காலை 5 மணிக்கு புளியந்தீவு  புனித மரியாள் பேராலயத்தில் திருப்பலியைத் தொடர்ந்து வவுணதீவினுடாகவும் மற்றும் செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்தில் காலை 5 மணி திருப்பலியைத் தொடர்ந்து கரடியனாறு ஊடாகவும் திருத்தலம் சென்றடையவுள்ளது.  

அன்னையின் பக்த அடியார்களின் நன்மை கருதி திருவிழாவின் போது போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர் மற்றும் பாதுகாப்பு, மின்சாரம் வழங்கள் போன்ற விடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம் எஸ் எம் நூர்தீன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X