2024 மே 15, புதன்கிழமை

ஆயிரம் வேல் தாங்கிய பக்தர்களுடன் கதிர்காம வேல்யாத்திரை

Janu   / 2023 ஜூன் 05 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

1,000 வேல்களுடன், 1000 முருக பக்தர்கள் கதிர்காமம் நோக்கி பயணிக்கும் மாபெரும் வேல் யாத்திரை சித்தர்கள் குரல் அமைப்பினரால் இவ்வருடத்தில் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இருந்து இவ் ஆறு நாட்கள் வேல் யாத்திரை ஆரம்பமாகின்றது.

திருமூலர் பெருமானின் அருளாசியுடன், சித்தர்களின் குரல் சிவசங்கர் குருஜியின் நேரடி வழிகாட்டலின் கீழ் இவ்வருடத்தில் இருந்து 1,000 வேல்களுடன், 1000 முருக பக்தர்கள் பயணிக்கும் மாபெரும் வேல் யாத்திரையாக, கதிர்காமம் நோக்கி கந்தனை தரிசிக்க வேலோடு மலையில் இருந்து "பாத யாத்திரை" தொடங்குகிறது.

இந்த மாபெரும் வேல் யாத்திரையை  வேலோடுமலை முருகன் ஆலயத்தின் ஆதீனகர்த்தா முருகஸ்ரீ தியாகராஜா ஆசிரியர்  வேல்சாமியாக இருந்து இவ்வருடம் முதல் யாத்திரையை தலைமையேற்று நடத்துகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .