2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கதிர்காமத்தில் கூட்டுப்பிரார்த்தனை

Janu   / 2025 டிசெம்பர் 16 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதினெட்டு சித்தர்களின் மூத்த சித்தரான ஸ்ரீ அகத்தியர் மாமுனிவரின் ஜீவநாடி அருள் வாக்கிற்கு அமைய இலங்கை ஸ்ரீ அகத்தியர் கூட்டுப்பிரார்த்தணை குழுவினர் ஏற்பாடு செய்யும் கூட்டுபிரார்த்தணையானது கதிர்காமம் தெய்வானை அம்மன் சந்நிதியில் எதிர்வரும் கார்த்திகை அமாவாசை நாளான வெள்ளிக்கிழமை (19) அன்று நடைபெறவுள்ளது. .

காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கும் இந்நிகழ்வு மாலை வரை நடைபெற திருவருள் பாலித்துள்ளது. இதில் ஜீவ நாடி வாசித்து, சிவபுராணம் கோளாருபதிகம் முற்றோதல் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்காக தமிழ்நாட்டில் இருந்து ஜீவ நாடி வாசிக்கும் அருளாளர் திரு ஜானகி ராமன் ஐயா கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்கைக்கு வரவிருக்கும் மிகப்பெரிய இயற்கை அனர்த்தத்தின் தாக்கத்தை குறைத்திடவும் இறந்த ஆத்மாக்கள் சாந்தி அடைய வேண்டியும் இக் கூட்டுப்பிரார்த்தனை இடம்பெறவுள்ளது.

அனைவரும் இந்த புண்ணிய கைங்கரியத்தில் கலந்து கொண்டு அருள்பெருவதோடு நமது  நாட்டையும் மக்களையும் பாதுகாப்போமாக, இது  சித்தர்கள் நமக்கு கொடுக்கும்  அறிய வாய்ப்பு எனவும் இதில்  சித்தர்கள் ஜீவ நாடியின் மூலம் நம்மோடு  தொடர்பு கொண்டு வாக்குரைப்பார்கள் எனவும் அனைத்து சித்தர்களின் நேரடி ஆசிகளைபெற வாரீர் 0719560460,0777609955,0777318030 எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X