2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கருட புராணத்தின் படி காலையில் செய்ய வேண்டிய கடமைகள்

Editorial   / 2021 நவம்பர் 01 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருட புராணம் என்பது ஒரு பழம்பெரும் புராண நூல் ஆகும். மனிதா்கள் தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதற்கான பலவகையான நெறிமுறைகளை கருட புராணம் அளித்திருக்கிறது.

குறிப்பாக ஒரு மனிதன் தினமும் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து, அவன் இறந்த பின்பு முக்தி அடைவது வரை அவன் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி இந்த புராணம் விவாிக்கிறது.

அந்த வகையில் காலை எழுந்தவுடன் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளைப் பற்றி கருட புராணம் சொல்கிறது.

அந்த கடமைகளைச் செய்தால் ஒவ்வொருவரும் தமது உடல் மற்றும் மனதை சுத்தமாக வைத்து, நோ்மறையான ஆற்றலைப் பெற்று, அந்த நாளை ஒரு புனிதமான நாளாக மாற்ற முடியும்.

கருட புராணம் சொல்லும் அந்த முக்கிய கடமைகளை மிக எளிதாகச் செய்யலாம். ஆகவே கருட புராணம் சொல்லும் அந்த கடமைகளைப் பற்றி இந்த பதிவில் பாா்க்கலாம்.

1. குளியல்
 
கருட புராணம் உட்பட எல்லா புனித நூல்களும், மனத் தூய்மையைப் பற்றி மட்டும் பேசாமல், உடல் தூய்மையைப் பற்றியும் பேசுகின்றன. உடலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் தினமும் குளிக்க வேண்டும்.

ஒரு மனிதன் தினமும் காலை நேரத்தில் குளித்தால், அந்த நாள் முழுவதும் புத்துணா்ச்சியுடன் இருக்கலாம். மேலும் அவருக்கு எந்த விதமான நோய்த் தொற்றும் ஏற்படாமல், தனது வேலைகளை சிறப்பாகச் செய்யலாம். அதன் மூலம் அவருக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

2. தானம் செய்தல்

கருட புராணம் மட்டும் அல்ல, எல்லா புனித நூல்களுமே தானம் செய்வதைப் பற்றிப் பேசுகின்றன. அதன்படி ஒவ்வொரு மனிதரும், தினமும் தன்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்ய வேண்டும்.

அவை உணவாக இருக்கலாம் அல்லது பிறருக்குப் பயன்படும் மற்ற பொருள்களாக இருக்கலாம். அவ்வாறு தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படும். மேலும் குடும்பத்தில் எந்த விதமான பற்றாக்குறையும் ஏற்படாது.

3. ஹோமம் வளா்த்தல்

எல்லா புனித நுல்களும் ஹோமம் வளா்ப்பதைப் பற்றி பேசுகின்றன. ஹோமம் வளா்த்தால், அந்த பகுதி முழுவதும் தூய்மை அடையும், மற்றும் அந்த வீட்டில் உள்ள எதிா்மறையான அதிா்வலைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

ஆனால் தினமும் ஹோமம் வளா்க்க முடியாது. அதற்கு பதிலாகத் தினமும் வீட்டில் விளக்கு ஏற்றலாம். மேலும் கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றலாம் அல்லது துளசி மாடத்தில் விளக்கு ஏற்றலாம். அதன் மூலம் நமது வேலைகளில் வெற்றி கிடைக்கும். மேலும் வாஸ்து சம்பந்தமான கோளாறுகளும் விலகும்.

4. பக்திப் பாடல்களைப் பாடுதல்

இறைவனைப் பற்றிப் பாடும் பக்திப் பாடல்களை தினமும் பாடலாம். அது எப்படிப்பட்ட மந்திரமாகவும் இருக்கலாம். ஆனால் அது கடவுளைப் பற்றிப் பாடுவதாக இருக்க வேண்டும். அவ்வாறு தினமும் பக்திப் பாடல்களைப் பாடி வந்தால், வீட்டில் இருக்கும் பீடைகள் மற்றும் தாித்திரங்கள் மறைந்து, வீடு புனிதமடையும். மேலும் வீட்டில் நல்ல சுப காாியங்கள் நடக்கும்.

5. இறை வழிபாடு

தினமும் காலையில் குளித்த பின்பு கடவுளை வழிபட வேண்டும். கடவுளை வழிபட்டு கடவுளுக்கு படையல் செய்ய வேண்டும். அதன் மூலமாக வீட்டில் உணவு பற்றாக்குறை இருக்காது. கடவுளுடைய அருள் நமது வீடு முழுவதும் நிறைந்து இருக்கும். அதோடு வீட்டில் இருக்கும் அனைத்து கெட்ட காாியங்களும் விலகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X