Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூலை 08 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவ திருக்கொடியேற்றத் நிகழ்வு திங்கட்கிழமை (07) அன்று சிறப்பாக நடைபெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில், ஆலய குரு சிவஸ்ரீ அங்குசநாத குருக்கள் ஒத்துழைப்பில் கொடியேற்ற உற்சவம் 12.00 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது.
ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையிலான பரிபாலன சபையினர், மற்றும் ஆயிரக்கணக்கான கந்தன் அடியார்கள் கலந்து கொண்டனர். இந்த உற்சவம் 18 நாட்கள் நடைபெற்று இம் மாதம் 24ஆம் திகதி சமுத்திர தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது.
இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களால் சிறிய கோயிலாக அமைக்கப்பட்டு பின்பு இராஜராஜ சோழர் காலத்தில் கற்கோயில் அமைக்க பெற்று நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு ஆடி அமாவாசை உற்சவமும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமும் பகலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படவிருக்கிறது. பிதிர்க்கடன் செலுத்துகின்ற ஆடி அமாவாசை உற்சவம் என்பதால் இம்முறை பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் மேலும் தெரிவித்தார்.
வி.ரி. சகாதேவராஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Jul 2025