2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சாய் சரணாலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி

Freelancer   / 2023 செப்டெம்பர் 04 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்தின் மேல்மாடியில் அமைந்துள்ள சீரடி சாய் நாத சரணாலயத்தில் புதன்கிழமை  (06) மாலை 4:00 – 06:00 மணிவரை கிருஷ்ண ஜெயந்தி நடைபெறவுள்ளது.

மாலை 4:00 மணிக்கு சிறுவர் சிறுமிகள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்வாக கிருஷ்ணனின் பலவித உருவப்படங்களுக்கு நிறந்தீட்டல், வினாவிடைபோட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மாலை 5:00 மணிக்கு ஸ்ரீ வரதாரஜ விநாயகர் ஆலயத்திலிருந்து பால கிருஷ்ணனை மேளதாளத்துடன் ஊர்வலமாக சாய் சரணாலயத்திற்கு சிறுவர்கள் அழைத்து வருவார்கள். தொடர்ந்து வரும் தொட்டிலிடல், தாலாட்டு பாடல் நிகழ்வில் பக்த அடியாhர்கள் எல்லோரும் கலந்துகொள்ளலாம்.

மாலை 5:15-5:30 வரை கிருஷ்ண பகவானுக்கு துளசி அர்ச்;சனையும் (பக்த அடியார்கள்; தங்கள் கரங்களினால் கிருஷ்ண பகவானை அர்ச்சனை செய்யலாம்). கிருஷ்ணாவுக்கு பிடித்த பிரசாதம் லட்டு, வெண்ணெய், முறுக்கு, சீடை போன்ற பிரசாதம் நைவேத்தியமும் செய்யப்படும். தொடர்ந்து 5:30 – 6:00 மணிவரை பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான உரியடித்தலில் சிறுவர், சிறுமிகள் பங்குபெறுவர். முடிவாக 6:00 – 6:30 வழமையான சீரடி சாயி மாலை ஆரத்தியுடன் லட்டு பிரசாதம் வழங்கப்படும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .