2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

சித்திரத் தேர் வெள்ளோட்டம்

Mithuna   / 2024 பெப்ரவரி 25 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

.சக்தி  

மட்டக்களப்பு  மாவட்டத்தில்  மிகவும்  பிரதிசத்தி  பெற்ற  குருமண்வெளி  அருள்மிகு ஸ்ரீ  சித்தி  விநாயகர்  ஆலயத்தில்  புதிதாக  அமைக்கப்பட்ட  சித்திரத்  தேர்  வெள்ளோட்டம் சனிக்கிழமை (24)  இடம்பெற்றது.

முதலில்  மூல  மூர்த்தியாகிய  அருள்மிகு  ஸ்ரீ  சித்தி  விநாயகருக்கு  பூஜைகள்  இடம்பெற்று,  பின்னர்  சித்திரத்  தேருக்குரிய  கலசத்திற்கு  அபிஷேகம்  இடம்பெற்றது.

தேருக்குரிய  கிரியைகள்,  பூஜை  வழிபாடுகள்  இடம்பெற்றதைத்  தொடர்ந்து  வடம்  பூட்டப்பட்டு  சித்திரத்  தேரின்  வெள்ளோட்டம்  இடம்பெற்றது.

ஆலய  பரிபாலன சபைத்  தலைவர்  செல்வ  ரவீந்திரன்  தலைமையில்  ஆலய  பிரதம  குரு  சிவஸ்ரீ  வே. குகேந்திரக்  குருக்கள்  தலைமையிலான  குழுவினர்  கிரியைகளை  மேற்கொண்டனர்.

இதன் போது  பல  நூற்றுக்கணக்கான  பக்கதர்கள்  கலந்து  கொண்டு  சித்திரத்  தேரின்  வடம்  பிடித்து  இழுத்து  வெள்ளோட்டத்தில்  கலந்து  கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X