2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

தத்ராத்ரேய அவதாரி ஸ்ரீபாத, ஸ்ரீ வல்லபரின் பாதுகை பூஜை

Freelancer   / 2023 ஒக்டோபர் 05 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாயி நாதனின் சரணாலயத்தில் குருபிரம்மா, குருவிஷ்ணு, குருமஹேஷ்வரர் இவர்களின் இணைந்த வடிவமான குரு ஸ்ரீ தத்தாத்ரேயரின் முதல் மானுட அவதாரமான ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் அவர்கள் பாதுகை ரூபத்தில் இலங்கை விஜயம்மேற்கொள்ளவுள்ளார்.

இம் மாதம், (14)ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு சாயி நாதனின் சரணாலயத்தில் ஸ்ரீ ருத்ர தத்த பாதுகா அபிசேகமும் பூசையும் நடைபெற்று, அன்பர்கள் பாதுகை தரிசனமும் ஆசிகளும் கிடைக்கப் பெறுவார்கள்.

இந்தியாவில் ஆந்திர பிரதேசத்தில் காக்கி நாடாவில் அமைந்துள்ள 18 சத்திபீடங்களில் ஒன்றான பீடாபுரம் என்ற திருத்தலத்தில் திரு அப்பல ராஜ சர்மாவுக்கும் அகண்ட சௌபாக்கியவதி மாதா சுமதிக்கும்குழந்தையாக 13 ஆம் நூற்றாண்டில் அவதரித்த ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் பல அதிசயங்களை அடியார்களுக்கு நிகழ்த்தினார்.

சென்னை திருவாளர் சுந்தர் சாய், ஆத்மார்த்த சாய் சேவகர், காஞ்சிபுரம் ஸ்ரீ சக்ர தத்த க்ஷேத்ர பீடத்தின் அறங்காவலர் மற்றும் மாருதிபுரம் (உத்திரமேரூர்) ஸ்ரீ சுவாமி சமர்த்த சேவா சமஸ்தானம், ஸ்ரீ குருதத்த பாதுகா ஷேத்ர அறங்காவலராக விளங்குபவர்.

இவர்கள் இருவரும் அத்தி மரத்தாலான சுவாமி ஶ்ரீ பாதரின் பாதுகைகளுடன் ஒக்டோபர் 13 ஆம் திகதி இலங்கை வருகிறார்கள்.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு, சாயி சரணாலயத்தில் பாதுகை பூசையும், தொடர்ந்து மகா பிரசாதமும் வழங்கும் நிகழ்வும் நடை பெறும். இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி தத்த குருவின் அருளாசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு  அன்பர்களை பணிவுடன் அழைக்கிறோம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X