2025 மே 01, வியாழக்கிழமை

தமிழ் வேத திருமுறை முற்றோதல்

Freelancer   / 2023 செப்டெம்பர் 27 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

நம்பியாண்டான் நம்பியின் மூலம் தொகுப்பித்து சைவ உலகிற்கு கிடைக்கப்பெற்ற பொக்கிசமான பன்னிரு திருமுறை எனும் தமிழ் வேத நூலினை ஓதும் திருமுறை முற்றோதல் நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வு  கடந்த திங்கட்கிழமை(25) திருக்கோவில் கோரைக்களப்பு ஸ்ரீ சமாதிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.

அம்பாரை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதினத்தின் அனுசரைணயுடன் குருகுல ஸ்தாபக தந்தை ஸ்ரீமான் சுவாமிநாதர் தம்பையா அடிகளாரின் திவ்ய ஆசியுடன் முகாமைத்துவ பணிப்பாளர் இறைபணிச்செம்மல் கண.இராரெத்தினத்தின் தலைமையில் ஆலய தலைவர் விஜயகுமாரின் ஒத்துழைப்போடு இடம்பெற்ற நிகழ்வுகளில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் கலந்து கொண்டதுடன் ஆலயத்தின் குருமார்கள் மற்றும் 63 ஓதுவார்கள் ஆலய நிருவாகத்தினர் அறநெறி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகம் அம்பாரை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் ஆகியோர்களது பங்குபற்றுதலுடன் திருக்கோவில் பிரதேசத்தில் பன்னிரு திருமுறை ஓதல் இரண்டவாது தடவையாக இடம்பெற்றுள்ளதுடன் முதல் தடவையாக முனையூர் படபத்திரகாளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .