2024 ஜூன் 18, செவ்வாய்க்கிழமை

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மலைப்பிள்ளையார் கும்பாபிஷேகம்

Mayu   / 2024 மே 26 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமையப்பெற்றுள்ள தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மலைப்பிள்ளையாருக்கான மகா கும்பாவிசேகம் 03.06.2024ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 30,31.05.2024ஆம் திகதிகளில் கிரியைகள் இடம்பெற்று 01,02.06.2024ஆம் திகதி ஆகிய இரு நாட்கள் எண்ணெக்காப்பு சாத்தும் நிகழ்வும் 03.06.2024ஆம் திகதி கும்பாவிசேகமும் நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

குறித்த காலங்களில் விசேட பொதுப்போக்குவரத்துச் சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், அடியார்களுக்கு ஆலய அன்னதான சபையினரால் அன்னதான ஒழுங்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X