2025 ஜூலை 31, வியாழக்கிழமை

திருக்கோணேஸ்வர ஆலய வருடாந்த பிரமோற்சவம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தட்சண கைலாயம் என்னும் திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோனேஸ்வரப் பெருமான் ஆலய பிரமோற்சவம் நிகழும் மங்களகரமான குரோதி  வருடம் பங்குனி மாதம் 28ம் நாள் (11.04.2025) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு துவஜாரோகணம் எனும் கொடியேற்றம் நிகழ்வுத் திருவருள் கூடியுள்ளது. 

அதனைத் தொடர்ந்து 16 நாட்கள் திருவிழா இடம்பெறும்(27.04.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு இரதோற்சவ திருவிழாவும், (28.04.2025) திங்கட்  கிழமை காலை 7.00 மணிக்கு  தீர்த்தோற்ஸவமும் இடம் பெற்று இரவு துவஜ அவரோகணம் எனும் கொடியிறக்கம் இடம்பெறும். (29.04.2025) செவ்வாய்க்கிழமை அன்று  பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறும். (30.04.2025) புதன்கிழமை அன்று தெற்பத்திருவிழாவும் இடம்பெறும்.

மகோற்சவ காலங்களில் தினமும் காலை 8.00 மணிக்கு அபிஷேகம், பிற்பகல் 3.30 மணிக்கு அபிஷேகம், மூலஸ்தானம் பூஜை,  ஸ்தம்ப பூஜை,  வசந்த மண்டப பூஜை இடம்பெற்று  வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பார். காலை உற்சவத்தின் பின்பு பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.மாலை உற்சவங்களின் பின் எம்பெருமானுக்கு ஆலயத்தில் கலை  நிகழ்வுகள் இடம் பெற உள்ளது.

அ . அச்சுதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .