R.Tharaniya / 2025 நவம்பர் 05 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய சிவபூமி திருமந்திரம் அரண்மனையில் 3000 திருமந்திர முற்றோதல் உடன் திருமூலரின் குருபூஜை செவ்வாய்க்கிழமை (04) அன்று ஆலயத் தலைவர் இ.மேகராசா தலைமையில் பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி நடைபெற்றது.
ஆலய குருக்களான சிவஸ்ரீ மு. கு.அமிர்தலிங்கம் , சிவஸ்ரீ வ. ஜோதிலிங்க குருக்கள் ஆகியோரின் கிரியைகளுடன் திருமூலர் குரு பூஜை நடைபெற்றது. கடந்த மூன்று தினங்களாக திருமூலர் அருளிய திருமந்திரம் மற்றும் மணிவாசகர் அருளிய திருவாசகம் என்பனவற்றின் முற்றோதல் இடம்பெற்றது.
ஆலய குரு சிவஸ்ரீ சபாரத்தின குருக்கள் தலைமையில் இம் முற்றோதல் இடம்பெற்றது. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய சைவ ஆன்மீக விருத்திச் சங்கம் ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் ஆலய பரிபாலன சபையின் வண்ணக்கர்களான இ. மேகராசா( தலைவர் ), சி.கங்காதரன்( செயலாளர் ),ச. கோகுலகிருஷ்ணன் ( பொருளாளர்) உள்ளிட்ட பரிபாலன சபையினர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச முன்னாள் தவிசாளர் அதிபர் சிவ.அகிலேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இரவில் சிவபூமி திருமந்திர அரண்மனை ஜெகஜோதியாக காட்சியளித்தது.






வி.ரி.சகாதேவராஜா
9 hours ago
07 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
07 Nov 2025