2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

திருவெம்பாவை ஊர்வலம்

Mayu   / 2025 ஜனவரி 08 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்துக்களின்  திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் காரைதீவில் சிறப்பான முறையில்  நடைபெற்றுவருகின்றது.

புதன்கிழமை  (08)  திருப்பள்ளியெழுச்சி ஊர்வலமானது கண்ணகி அம்மன் ஆலயத்தில் அதிகாலை 4. 00 மணியளவில் ஆரம்பமாகி காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை 5.30 க்கு சென்றடைந்து அங்கு திருவெம்பாவை பாடுதலுடன் நிறைவடைந்தது.

ஆலய பிரதம பூசகர் எஸ்.லோகேஸ் சிறப்பு பூஜையை நடாத்தி​யதோடு சங்கத்தின் முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் அறநெறி மாணவர்களின் சிறப்புரைகள் இடம் பெற்றன. உரையாற்றிய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

சிவனை நினைந்து வழிபடும் இவ்விரதம்   கடந்த 04.01.2024ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை ஆரம்பமாகியது. தொடர்ந்து 10தினங்கள்  திருவெம்பாவை ஊர்வல நிகழ்வுகள் ஆலய பூஜைகள் இடம்பெறும்.

இக்காலகட்டத்தில்   பிரம்ம முகூர்த்த அதிகாலை வேளையில் ஆலய வழிபாட்டில் ஈடுபடுவதுடன் இவ் ஊர்வலத்திலும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல நடராஜப் பெருமானின் அருளைப் பெறுவது இந்துக்களின் வழமையான செயற்பாடாகும்.

காரைதீவுஇந்து சமயவிருத்திச்சங்கம் வருடாவருடம் நடாத்திவரும்  திருப்பள்ளி எழுச்சி ஊர்வலமானது  13ஆம் திகதி திங்கட்கிழமை திருவாதிரை அதாவது ஆருத்ரா தரிசனத்துடன்  நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வி.ரி. சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X