R.Tharaniya / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்திய பாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதி பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்தின் இந்துக்களின் வருடாந்த விரதங்களில் ஒன்றான கந்தசஷ்டி விரதத்தில், திங்கட்கிழமை (27) அன்று விரதமிருந்து முருக பக்தர்களால் பாற்குடம் ஏந்தி வரும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பக்தர்கள்பாற்குடம் ஏந்திய வண்ணம் வீரபத்திர காளியம்மன் ஆலயம் வரை சென்று மீண்டும் திரௌபதி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர்.
விரதத்தில் இருந்து முருகனின் அருட்கடாட்சம் கிடைக்க வேண்டி பாலை முருகனுக்கு அபிஷேகத்துக்கு வழங்கினர்.
ஆலய பூஜைகளை பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சரக் குருக்கள் ஆரம்பித்துவைத்தார். இதில் பல பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.







எம்.யூ.எம்.சனூன்
23 minute ago
37 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
37 minute ago
59 minute ago
2 hours ago