Mayu / 2026 ஏப்ரல் 21 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு, நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று (21) செவ்வாய்க்கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பமானது.

இன்று காலை முதல் பெருந்திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, பக்திப் பெருக்குடன் சுவாமிக்கு எண்ணெய்க்காப்பு சாத்தி வழிபட்டனர்.

இந்த நிகழ்வு நாளை (22) புதன்கிழமையும் தொடர்ச்சியாக நடைபெறும் என ஆலய தர்மகர்த்தாக்களான இரா. திருநாவுக்கரசு மற்றும் கே. ஜெகமோகன் ஆகியோர் தெரிவித்தனர்.

அத்துடன், கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் வியாழக்கிழமை (23) காலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வி.ரி.சகாதேவராஜா


2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago