Janu / 2026 மே 17 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி பெருங்கோவிலின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
ஆலயத்தின் வெளிச்சுற்றாடல் மற்றும் அத்தியாவசியச் செயற்பாடுகளைக் காத்திரமாக முன்னெடுக்கும் யாழ் மாநகர சபைக்கு, ஞாயிற்றுக்கிழமை (17) காலை 10:00 மணியளவில் மகோற்சவ பத்திரிகையும் காளாஞ்சியும் தேவஸ்தானத்தால் சம்பிரதாயபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள், நல்லூர் தேவஸ்தான பிரதிநிதிகளிடமிருந்து மகோற்சவ பத்திரிகையையும் காளாஞ்சியையும் முறைப்படி பெற்றுக்கொண்டனர்.
இந்த மங்களகரமான நிகழ்வையொட்டி, யாழ் மாநகர சபை வளாகம் முழுவதும் வாழை மற்றும் தோரணங்களால் பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது.




11 minute ago
20 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
31 minute ago